எந்த மதமாக இருந்தாலும், உடை அணிவது என்பது அவரவர் சொந்த விருப்பம்- உமர் அப்துல்லா
தமிழகத்தின் பல கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி உள்ளன என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா பேசினார்.
சென்னை,
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ’உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா பேசியதாவது:
’தமிழகத்திலிருந்த வெகு தொலைவில் ஜம்மு-காஷ்மீர் இருந்தாலும், காஷ்மீருக்காக தமிழகம் குரல் கொடுத்தது. தோளோடு தோள் நின்றதை மறக்கமாட்டோம். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால்தான் நான் இங்கு நிற்கிறேன்.
தமிழகத்தின் பல கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி உள்ளன. இந்தியா மிகப் பெரிய நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாடு. எந்த மதமாக இருந்தாலும், உடை அணிவது என்பது அவரவர் சொந்த விருப்பம். நமது தனித்தன்மையை ஒருபோதும் இழந்து விடக்கூடாது. ஜம்மு காஷ்மீர் மக்களின் குரலை கேட்காமல் மாநிலம் பிரிக்கப்பட்டது” என்றார்.
Related Tags :
Next Story