நீளும் ரஷியா-உக்ரைன் போர்: தங்கம் விலை ரூ.352 அதிகரித்தது


நீளும் ரஷியா-உக்ரைன் போர்: தங்கம் விலை ரூ.352 அதிகரித்தது
x
தினத்தந்தி 1 March 2022 12:18 AM IST (Updated: 1 March 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

நீளும் ரஷியா-உக்ரைன் போர்: தங்கம் விலை ரூ.352 அதிகரித்தது ஒரு பவுன் ரூ.38,256-க்கு விற்பனை.

சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.4,738-க்கும், பவுன் ரூ.37,904-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று அதிகரித்தது. அதன்படி முந்தைய தினத்தை விட கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.4,782-க்கும், பவுனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.38,256-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்தது. அதன்படி முந்தைய தினத்தை காட்டிலும் கிராமுக்கு 90 பைசா உயர்ந்து ரூ.69.90-க்கும், கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.69,900-க்கும் வெள்ளி நேற்று விற்பனை ஆனது.

ரஷியா-உக்ரைன் போர் உச்சம் அடைந்து வரும் நிலையில் பங்குச்சந்தை மீண்டும் சரிவில் பயணிக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது மீண்டும் முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story