பள்ளி மாணவியை போதைக்கு அடிமையாக்கி கூட்டு பலாத்காரம்
பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி போதைக்கு அடிமையாக்கி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த மருத்துவ மாணவர், துணை நடிகர், பேராசிரியர் மற்றும் கல்லூரி மாணவர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி, ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் மாணவியின் தாய், ஆசிரியையாக உள்ளார். மாணவி, தனது பள்ளி அருகே உள்ள பானிபூரி கடைக்கு சக தோழிகளுடன் அடிக்கடி செல்வது வழக்கம்.
அங்குள்ள தனது தோழி வீட்டுக்கும் சென்று வந்தார். அப்போது ராமாபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்த்கிரிஷ் (வயது 20) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். அப்போது வசந்த்கிரிஷ், மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய மாணவி, காதலன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
போலீசில் புகார்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி, உடல் ரீதியாக சோர்வாக காணப்பட்டார். இதுபற்றி அவரது பெற்றோர் விசாரித்தபோது, தங்கள் மகள் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதும், மருத்துவ மாணவர் வசந்த்கிரிசை காதலித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் வசந்த்கிரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் மாணவிக்கு போதை பொருள் கொடுத்து கூட்டாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
துணை நடிகர், பேராசிரியர்
விசாரணையில், மாணவியின் காதலன் வசந்த்கிரிஷ் மற்றும் அவரது நண்பர்களான சினிமா துணை நடிகர் சதீஷ்குமார் என்ற பாலசிவாஜி (25), தனியார் பல் மருத்துவ கல்லூரியில் பகுதிநேர பேராசிரியராக பணியாற்றும் நங்கநல்லூரைச் சேர்ந்த பிரசன்னா (32), கோடம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விஷால் (19) ஆகிய 4 பேரும் சேர்ந்து கடந்த ஒரு மாதமாக பள்ளி மாணவியை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்தது தெரியவந்தது.
ஆரம்பத்தில் காதலன் வசந்த்கிரிஷ் தங்கி உள்ள வீட்டுக்கு மாணவி சென்றுவந்தபோது அவருக்கு ‘ஹூக்கா’ என்ற போதைப்பொருள் கொடுத்துள்ளார். அதன்பிறகு போதைக்கு அடிமையான மாணவியிடம் அவர் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டார். இதுபற்றி வசந்த்கிரிஷ் தனது நண்பர்களான சதீஷ்குமார், பிரசன்னா, விஷால் ஆகியோரிடம் கூறினார்.
கூட்டு பலாத்காரம்
இதையடுத்து அவர்களும் மாணவியை வீட்டுக்கு வரவழைத்து போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். வசந்த்கிரிசுடன் காதல் ஏற்பட்டதும், அவரது நண்பர்களுடனும் மாணவி நெருக்கமாக பழகினார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மாணவியை அனைவரும் கூட்டு சேர்ந்து சீரழித்து உள்ளனர்.
இவ்வாறு ஒரு மாதத்துக்கு மேலாக மாணவியை வசந்த்கிரிஷ் தனது நண்பர்களுக்கு விருந்தாக்கி உள்ளார். போதைக்கு அடிமையான மாணவி, இதுபற்றி வெளியே சொல்ல முடியாமல் மருத்துவ மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் கொடுத்த பாலியல் வேதனையை அனுபவித்து வந்தார். மாணவி உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட பின்னரே அவரது பெற்றோருக்கு இதுபற்றி தெரியவந்துள்ளது.
4 பேர் கைது
பள்ளி மாணவியை போதைக்கு அடிமையாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காதலன் வசந்த்கிரிஷ், சதீஷ்குமார், பிரசன்னா, விஷால் ஆகிய 4 பேரையும் வடபழனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் இவர்கள் மாணவியுடன் நெருக்கமாக இருந்தபோது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்தனரா? என அவர்களது செல்போன்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வேறு யாராவது இதுபோல் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மாணவியின் தோழிகள் சிலரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story