தன்னை மறந்து சாலையோரம் சிறுநீர் கழித்தவர்...! சங்கிலியை பறிகொடுத்தார்....!
சாலையோரம் சிறுநீர் கழித்தவரின் சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் புங்கனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 47). இவர் வேலைக்கு சென்றுவிட்டு நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
சுப்பிரமணியன் திருச்சி - திண்டுக்கல் சாலையில் வந்த போது கோரை ஆற்று பாலத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையோரமாக சிறு நீர் கழித்து உள்ளார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென பின்புறமாக வந்து சுப்ரமணியன் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக சுப்பிரமணி அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
விசாரணையில் ராம்ஜிநகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (28) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தை தொடர்ந்து அவரை போலீசார் கைது உள்ளனர்.
Related Tags :
Next Story