10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு - முழுமையான அட்டவணை வெளியீடு!!
10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முழுமையான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பை இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும் தொடங்குகிறது.
10,11,12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்குகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: மே 6 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: மே 9 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு: மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்: பத்தாம் வகுப்புக்கு ஜூன் 17 ஆம் தேதி, 11 ஆம் வகுப்புக்கு ஜூலை 7 ஆம் தேதி, 12 ஆம் வகுப்புக்கு ஜூலை 23 ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு: 2022-23 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
Related Tags :
Next Story