கோனியம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கியது..!
கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கியது.
கோவை,
கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பிற மாவட்ட பக்தர்களும் வருகை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் கடந்த 22-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்னவாகனம் என நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து
கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் எழுந்தருளிய தேர் மிதந்து வருகிறது.
ராஜவீதியில் உள்ள தேர் முட்டியில் தொடங்கி ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் முட்டியை அடைகிறது.
தொடர்ந்து வருகிற 3-ந் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டை நிகழ்ச்சியும், 4-ந் தேதி தெப்பத்திருவிழாவும், 5-ந் தேதி கொடியிறக்கமும், 7-ந் தேதி வசந்தவிழாவுடன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.
Related Tags :
Next Story