டிக்கெட் இன்றி பயணம்; ரூ. 7.79 கோடி அபராதம் வசூல் - மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தகவல்


டிக்கெட் இன்றி பயணம்; ரூ. 7.79 கோடி அபராதம் வசூல் - மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 2 March 2022 11:51 PM IST (Updated: 2 March 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

கடந்த ஒரு ஆண்டில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 1.37 லட்சம் பயணிகள் பிடிபட்டதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை,

மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில்களிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடப்பாண்டு பிப்ரவரி 27 வரை நடத்திய திடீர் சோதனைகளில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 1.37 லட்சம் பயணிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.7.79 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதே காலத்தில் தெற்கு ரயில்வே அளவில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் அபராதமாக ரூ.83.99 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பிப்ரவரி மாதம் மட்டும் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த பயணிகளிடம் இருந்து தெற்கு ரயில்வே அளவில் ரூ.9.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story