பா.ம.க. வேளாண் நிழல் பட்ஜெட்: விவசாயத்தை மேம்படுத்த ரூ.70 ஆயிரம் கோடியில் 296 புதிய திட்டங்கள்
பா.ம.க. வேளாண் நிழல் பட்ஜெட்டை அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதில் விவசாயத்தை மேம்படுத்த ரூ.70 ஆயிரம் கோடியில் 296 திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
சென்னை,
2022-2023-ம் ஆண்டுக்கான பா.ம.க. வேளாண் நிழல் பட்ஜெட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வரவேற்றார். இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேளாண் நிழல் பட்ஜெட்டை வெளியிட, துணை பொதுச் செயலாளர்கள் ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர், பொருளாளர் திலகபாமா, சமூகநீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
ரூ.70 ஆயிரம் கோடி
வேளாண் நிழல் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்ட இந்த பட்ஜெட்டில், வேளாண் துறைக்காக ரூ.50 ஆயிரம் கோடியும், நீர்வளத்துறைக்காக ரூ.20 ஆயிரம் கோடியும் செலவிடப்படும். 2022-23-ம் நிதியாண்டில் 60 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மழையால் சேதமடையும் நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படும். தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் புதிதாக வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.
3 அமைச்சகங்கள்
வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம், வேளாண் விலைபொருள் கொள்முதல் ஆணையம் ஏற்படுத்தப்படும். வேளாண்துறை மூன்றாக பிரிக்கப்பட்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சந்தை ஆகிய அமைச்சகங்கள் உருவாக்கப்படும்.
விவசாய பொருட்களை இரவு 8 மணிக்கு மேல் அரசு பஸ்களில் இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். இவை உள்ளிட்ட 296 திட்டங்கள் நிழல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
தன்னிறைவு பெற்ற மாநிலம்
நிகழ்ச்சி முடிவில் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த வேளாண் நிழல் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றினால் அதை பா.ம.க. வரவேற்கும். இத்திட்டங்களை நிறைவேற்றும்போது தமிழகம் விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும்.
கடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 40 திட்டங்களில் 26 திட்டங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியும், ஆண்ட கட்சியும் கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து வெற்றி பெற்றுள்ளன. அதிகாரம் மற்றும் பண பலத்துக்கு மத்தியில் பா.ம.க. நேர்மையான முறையில் போட்டியிட்டு பல்வேறு இடங்களில் வெற்றி கண்டுள்ளது.
தேர்தலை முறையாக நடத்தவில்லை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் முறையாக நடத்தவில்லை.
வாக்கு சதவீதத்தை கொண்டு பா.ஜ.க.வுடன் பா.ம.க.வை ஒப்பிட வேண்டாம். நாங்கள் பரவலாக வெற்றி பெற்றுள்ளோம்.
ஒரே மாதிரியான கருத்துகள் மற்றும் சித்தாந்தங்களை கொண்ட மாற்றத்துக்கான கூட்டணிதான் 2024-ம் ஆண்டு ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story