1,000 சிறிய கோவில்களில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,000 சிறிய கோவில்களில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை ஓட்டேரி, ஆதிபடவேட்டம்மன் கோவில், பிரிக்ளின் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில், அயனாவரம் மேட்டுத்தெருவிலுள்ள சர்வ சக்தி விநாயகர் கோவில்களில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் கோவில் வளர்ச்சி குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் உடனிருந்தார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு, நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஓட்டேரி ஆதிபடவேட்டம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது திருப்பணிகள் மேற்கொண்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. உள்பிரகாரத்தில் உள்ள முருகன் சன்னதி ஆகமவிதிபடி புனரமைக்கப்பட உள்ளது. பிரிக்ளின் சாலையிலுள்ள 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீர ஆஞ்சநேயர் கோவில் 3 அடி பள்ளத்தில் உள்ளது. ஆகமவிதிபடி திருப்பணிகள் தொடங்கப்பட்டு உயரத்திற்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
சர்வ சக்தி விநாயகர் கோவில்
அயனாவரம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த கணேஷப்பா- கோவிந்தம்மாள் தம்பதியினர் 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் கட்டிய சர்வ சக்தி விநாயகர் கோவில், தங்கள் காலத்திற்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயில் எழுதியிருந்தனர். தற்போது அவர்கள் மறைவுக்கு பிறகு மேட்டுத்தெரு மக்கள் கோவிலை, அறநிலையத்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர். விரைவில் கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.
சிறிய மற்றும் பெரிய 150-க்கும் மேற்பட்ட கோவில்கள் வளர்ச்சி மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, கோவிலுக்கு சொந்தமான மனைகள், கடைகள், நிலங்கள் முறையாக வாடகை தொகை வசூல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் 47 முதுநிலை கோவில்களும், முதுநிலை அல்லாத கோவில்களும் உள்ளன. இதில் 1,000-க்கும் மேற்பட்ட சிறிய கோவில்களில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மயிலாப்பூர் கோவில் மயில்
தொடர்ந்து கோவில் விழாக்கள் நடத்துவது குறித்து கி.வீரமணி கருத்துக்கு கருத்து பரிமாற்றங்களை சுட்டி காட்டுவதை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. இங்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி சிறப்பாக செயலாற்றி வருகிறோம். எந்தவொரு அரசியல் கலப்பும் இல்லாமல், சிறப்பாக சிவராத்திரி விழா நடத்தியுள்ளோம். வரும் காலங்களில் மகாசிவராத்திரி விழா இன்னும் மிக சிறப்பாக நடத்தப்படும். எந்த கட்டணமும் இல்லாமல், பக்தர்கள் சிறப்பாக சாமி தரிசனம் செய்தனர்.
தி.மு.க. எம் மதமும் சம்மதம் என்று நினைக்கும் கட்சி. எங்களுக்கு ஆத்திகர்களும், நாத்திகர்களும், வாக்களித்திருக்கிறார்கள். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான மயில் காணாமல் போனது குறித்து பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் குளத்தில் சிலை உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, தாயகம் கவி எம்.எல்.ஏ., சென்னை மண்டல இணை கமிஷனர் தனபால், செயல் அலுவலர்கள் சுரேஷ் மற்றும் ஜெயராமன் உட்பட பலர் இருந்தனர்.

Related Tags :
Next Story