தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு...!
தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக ஒருங்கிணைந்த பால்வளத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக ஒருங்கிணைந்த பால்வளத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுகிறது.
1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515-ல் இருந்து ரூ.535 ஆக உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27ல் லிருந்து ரு.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குல்பி ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த பால்வளத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story