திருச்சி மாநகராட்சியின் மேயராக அன்பழகன் தேர்வு...
திருச்சி மாநகராட்சியின் மேயராக அன்பழகன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
திருச்சி,
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. தேர்தலில் வெற்ற பெற்றவர்கள் கவுன்சிலராக பதவியேற்று கொண்டர்.
இந்த நிலையில் மாநகராட்சி மேயர், துணை மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது.
அந்தந்த மாநகராட்சி கூட்ட அரங்கில் காலை 9.30 மணிக்கு மேயர் தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயர் தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்த வகையில் திருச்சி மாநகராட்சிக்கான முறைமுக தேர்தல் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று. இதில் திமுக சார்பில் 27-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்பழகன் என்பவர் மேயர் பதிவிக்கு போட்டியிட்டார்.
அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து திருச்சி மேயராக அன்பழகன் பதவியேற்றுக் கொண்டார்.
Related Tags :
Next Story