தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக என்.பி.ஜெகன் பெரியசாமி தேர்வு


தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக என்.பி.ஜெகன் பெரியசாமி தேர்வு
x
தினத்தந்தி 4 March 2022 3:25 PM IST (Updated: 4 March 2022 3:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக என்.பி.ஜெகன் பெரியசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தூத்துக்குடி,

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது.  இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று  நடக்கிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் என்.பி.ஜெகன் பெரியசாமி போட்டியிட்டார்.

இதில் பெரும்பான்மையான ஆதரவு என்.பி.ஜெகன் பெரியசாமி இருந்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயராக அவர் தேர்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து நடந்த பதவியேற்பு விழாவில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்  கீதாஜீவன் கலந்து கொண்டு தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமிக்கு செங்கோலை வழங்கினர்.




Next Story