"கூட்டணி அறத்தை காக்க வேண்டும்" - முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை


கூட்டணி அறத்தை காக்க வேண்டும் -  முதல் அமைச்சர் மு.க  ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை
x
தினத்தந்தி 4 March 2022 3:34 PM IST (Updated: 4 March 2022 3:34 PM IST)
t-max-icont-min-icon

கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.


சென்னை, 

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் நேற்று முன்தினம் கவுன்சிலர்களாக பதவியேற்றனர். இதையடுத்து மேயர், துணை மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று தி.மு.க. சார்பில் 20 மாநகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் நேற்று ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் தி.மு.க.வினர். எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு விடுதலை சிறத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் உத்தரவை மீறி நின்று வெற்றிப் பெற்ற திமுக வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். மேலும் கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story