உடுமலை நகராட்சி தலைவர் பதவி தி.மு.க. போட்டி வேட்பாளர் வெற்றி
உடுமலை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வின் அதிகாரப் பூர்வ வேட்பாளரை தோற் கடித்து அக்கட்சியின் போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று நடந்த மறைமுக தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்த பேரூராட்சி தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தி.மு.க. சார்பில் கவுன்சிலர் ராணி என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளருக்கு போட்டியாக களமிறங்கி வெற்றி பெற்றார்.
திருத்துறைப்பூண்டி நகராட்சி
இதேபோல தி.மு.க. கூட்டணியில் திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கிய பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி, தேனி அல்லிநகரம் நகராட்சியில் காங்கிரசுக்கு ஒதுக்கிய தலைவர் பதவி, கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கிய துணை தலைவர் பதவி ஆகியவற்றை தி.மு.க. கைப்பற்றியது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் தலைவர் பதவிக்கு தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட்ட ஜெயக்குமாரை எதிர்த்து களமிறங்கிய தி.மு.க. நகர செயலாளர் மத்தீன் வெற்றி பெற்றார்.

Related Tags :
Next Story