நகராட்சி, பேரூராட்சி மறைமுக தேர்தல் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற தி.மு.க.வினர்
நகராட்சி, பேரூராட்சி மறைமுக தேர்தலில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற தி.மு.க.வினர் உடனே பதவி விலக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
மறைமுக தேர்தல்
21 மாநகராட்சிகளை முழுமையாக கைப்பற்றியதுடன், நகராட்சிகளில் 132 இடங்களையும், பேரூராட்சிகளில் 436 இடங்களையும் பிடித்தது.
இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் கடந்த 2-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். மாநகராட்சி மேயர் - துணை மேயர், நகராட்சி தலைவர் - துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர் - துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.
கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியும், சேலம், காஞ்சீபுரம் மாநகராட்சிகளில் துணை மேயர் பதவியும் ஒதுக்கப்பட்டது. இதேபோல், நகராட்சி தலைவர் பதவியில் 6 இடங்களும், துணைத்தலைவர் பதவியில் 9 இடங்களும், பேரூராட்சி தலைவர் பதவியில் 8 இடங்களும், துணைத்தலைவர் பதவியில் 11 இடங்களும் வழங்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவி, 2 நகராட்சி தலைவர் பதவி, 3 துணைத்தலைவர் பதவி, 3 பேரூராட்சி தலைவர் பதவி, 6 துணைத்தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. இதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி, 1 நகராட்சி தலைவர் பதவி, 4 துணைத்தலைவர் பதவி, 4 பேரூராட்சி தலைவர் பதவி, 6 துணைத்தலைவர் பதவி ஆகியவை வழங்கப்பட்டது.
பதவிகள் தட்டிப்பறிப்பு
ம.தி.மு.க.வுக்கு ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி, ஒரு நகராட்சி தலைவர் பதவி, 3 துணைத்தலைவர் பதவி, 3 பேரூராட்சி தலைவர் பதவி, 3 துணைத்தலைவர் பதவி ஆகியவையும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவி, 2 நகராட்சி தலைவர் பதவி, 3 துணைத்தலைவர் பதவி, 3 பேரூராட்சி தலைவர் பதவி, 7 துணைத்தலைவர் பதவி ஆகியவையும் ஒதுக்கப்பட்டது.
மீதமுள்ள இடங்களில் தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், மறைமுக தேர்தல் நடைபெற்ற நேற்று, சில நகராட்சிகள், பேரூராட்சிகளில் தி.மு.க. தலைமையின் அறிவிப்பையும் மீறி, அக்கட்சி உறுப்பினர்கள் கூட்டணி கட்சி களுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளை தட்டிப்பறித்தனர். இது தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வெளிப்படையாகவே தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த இக்கட்டான நிலையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவசரமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், நேற்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றையும் அதிரடியாக வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கட்டுப்பாடுதான் முக்கியம்
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பெற்ற வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.
அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுக தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலையடைய வைக்கிறது. பேரறிஞர் அண்ணா சொன்ன “கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டில்” மூன்றாவதாக சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கருணாநிதி அடிக்கடி சொல்வார்.
குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கிறேன்
அந்த கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கட்சி தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எந்த தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்த காலத்திலும் உருக்குலைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
ராஜினாமா செய்யுங்கள்
தி.மு.க. தலைமை அறிவித்ததை மீறி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலகவேண்டும். விலகாவிட்டால் அவர்கள் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கட்சி தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கட்சியின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்த பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story