முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி மாவட்ட கலெக்டர்கள் மாநாடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 10 முதல் 12-ம் தேதி வரை மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு நடைபெற உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி (மார்ச் 10 முதல் 12) வரை மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் (காவல் கண்காணிப்பாளர்கள்), வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற்ற உள்ளது.
3 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களில் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல், அந்த வளர்ச்சி திட்டங்களை மேலும் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், வனத்துறை அலுவலர்கள், மாவட்ட எஸ்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த மாநாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இந்த மாநாடு சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் முறையாக வனத்துறை அலுவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story