பல் துலக்கிக் கொண்டிருந்தபோது கன்னத்தை கிழித்து வெளியே வந்த பிரஸ் - அதிர்ச்சி சம்பவம்
பல் துலக்கும் போது தவறி விழுந்ததில் வாயில் சிக்கிய பிரஸ்ஸை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரேவதி. இவர் கடந்த வியாழக்கிழமை காலை வழக்கம் போல் பல் துலக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பல் தேய்க்கும் பிரஸ் ரேவதியின் ஒரு பக்க கன்னத்தை கிழித்து மறுபுறம் சென்றுள்ளது. இதில் பல் தேய்க்கும் பிரஸ் அவரது வாய் பகுதியில் சிக்கி பலத்த காயம் அடைந்தது.
இதை கண்ட அருகில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் நிலைமையைக் கண்ட மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரஸ்ஸை அகற்ற முடிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று ரேவதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது வாயிலிருந்து பிரஸ்ஸை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். இதை அடுத்து அவர் குணமான நிலையில் சாதரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பல் துலக்கும் போது பிரஸ் வாயில் சிக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story