தமிழ் நிலத்தை தி.மு.க என்றும் காக்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


தமிழ் நிலத்தை தி.மு.க என்றும் காக்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x
தினத்தந்தி 6 March 2022 2:03 PM IST (Updated: 6 March 2022 2:03 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் நிலத்தை தி.மு.க என்றும் காக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
 
தமிழர் தலைமுறை தழைக்கத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் ஆட்சியமைத்த நாள் இன்று! எத்தனை சோதனைகள் - அடக்குமுறைகள் - அவதூறுகள்! அத்தனையும் கடந்து தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு எத்தனை எத்தனை சாதனைகள்!

இனப் பகைவரும் அவர்தம் கைக்கூலிகளும் ஆயிரம் அரிதாரம் பூசி வந்தாலும், அவர்களுக்கே உரிய பொய்யும் புரட்டும் வன்மமும் கலந்து வசை மாரி பொழிந்தாலும், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் தி.மு.கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும்! 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Next Story