திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை; போலீசார் விசாரணை...!


திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை; போலீசார் விசாரணை...!
x
தினத்தந்தி 7 March 2022 12:19 PM IST (Updated: 7 March 2022 12:19 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


குள்ளனம்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் மா.மு கோவிலூர் மொண்டியபட்டி அருகே வெட்டு காயங்களுடன் வாலிபர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். ஆனால் மோப்ப நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள், அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில்,

இந்த கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் பெரியகோட்டையை சேர்ந்த முனியப்பன் மகன் கோபால்சாமி (வயது 29) . இவர்  தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

கோபால்சாமிக்கும் பெரியகோட்டையை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.


Next Story