எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா வழியில் மீண்டும் மக்களாட்சி அமையும் - சசிகலா அறிக்கை
‘எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா வழியில் மீண்டும் மக்களாட்சி அமையும்' என்றும், சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை,
திருச்செந்தூர் முருகப் பெருமானையும், விஜயாபதி விசுவாமித்திரரையும் தரிசிக்க தென் மாவட்டங்களுக்கு சென்று வந்தது, மிகுந்த மனநிறைவு மற்றும் மகிழ்ச்சியை தந்துள்ளது. தென் மாவட்ட மக்கள் என்னை அன்போடு அரவணைத்து மிகப்பெரிய வரவேற்பு அளித்து எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்து என்னை திக்குமுக்காட செய்து விட்டனர்.
தொண்டர்களது எதிர்பார்ப்புகளையும், ஏக்கங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. நம் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அனைவரும் ஒரு சேர முழக்கம் எழுப்புகிறீர்கள். நீங்கள் அனைவரும் என்மீது வைத்த இந்த அசைக்க முடியாத நம்பிக்கை வீண் போகாத வகையில் உங்கள் அனைவருக்காகவும், தமிழக மக்களுக்காகவும் என் எஞ்சிய வாழ்நாளை அர்ப்பணித்து நிச்சயம் நிறைவேற்றுவேன்.
மக்களாட்சி அமையும்
நம் இயக்கத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர்., வழிநடத்திய ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியில் அதே மக்களாட்சியை மீண்டும் அமைத்து, ‘மக்களால் நான்... மக்களுக்காகவே நான்...', என்று தமிழக மக்களுக்காக வாழ்ந்த ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தை மனதில் வைத்து தமிழக மக்களின் நலன் காப்பாற்றப்படும் என்று மனம் நிறைந்து சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story