இலங்கை சிறையில் இருந்துராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை
இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 7-ந் தேதி அன்று 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் மற்றும் படகுகளை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இலங்கை சிறையில் தவித்து வரும் ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் நேற்று ஊர்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி கஜநீதிபாலன், ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டதுடன், 3 படகுகளின் உரிமையாளர்கள் வருகிற 27-ந் தேதி கோார்ட்டில் விசாரணைக்கு படகின் ஆர்.சி. புத்தகத்துடன் ஆஜராக வேண்டும். உரிமையாளர்கள் ஆஜராகவில்லை என்றால் 3 படகுகளும் அரசுடைமை ஆக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
அழைத்து வருவது எப்போது?
நேற்று விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களுடன் சேர்த்து 44 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டவர்கள் கொழும்பில் இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் நாகை, காரைக்கால் பகுதியை சேர்ந்த 21 பேரும், ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 8 பேரும் என மொத்தம் 29 மீனவர்கள் மட்டும் விமானம் மூலம் இன்று சென்னை அழைத்து வரப்படுகிறார்கள்.
மீதமுள்ள 15 மீனவர்களும் அடுத்ததாக விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என தெரிகிறது.

Related Tags :
Next Story