திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து - அமலுக்கு வந்தது
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு கட்டண தரிசனத்தை ரத்து செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதன்படி கோவிலில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த ரூ.250 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் ரூ.20 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது, அதே சமயம் ரூ.100 கட்டண தரிசனம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் ஆகிய இரு வரிசைகளில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொதுதரிசன முறையில் வரும் பக்தர்கள் மகாமண்டபத்தில் இருந்து ஒரே வழியில் அனைத்து பக்தர்களும் சமமாக சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story