கன்னியாகுமரியை சேர்ந்த 33 மீனவர்களை கைது செய்தது சீசெல்சு கடற்படை...!
கன்னியாகுமரியை சேர்ந்த 33 மீனவர்களை சீசெல்சு கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி,
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த 33 மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி சீசெல்சு நாட்டு கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். மீனவர்களை கைது செய்தது மட்டுமின்றி அவர்களது 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக குமரி மீனவர்கள் 8 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story