மேலூர் கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு..!
மதுரை மேலூர் கோவிலில் உள்ள பூசை பொருட்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது.
மதுரை,
மதுரை மாவட்டம், மேலூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் கீழ் பகுதியில் உள்ள அறையில் அம்மனுக்கு பூஜை செய்யும் பொருட்களை வைத்துள்ளனர்.
இந்நிலையில் மர்ம நபர் அறையின் செட்டரை உடைத்து உள்ளே உள்ள பித்தளை பாத்திரம், பூசை விளக்கு சாமான்கள் மற்றும் பித்தளை குடம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுவிட்டனர். திருடப்பட்ட பொருட்கள் சுமார் 120 கிலோ இருக்கும் என தெரிவித்தனர். மேலும் சம்பவம் குறித்து கோவில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story