"தமிழக பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இருக்காது" - பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்


தமிழக பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இருக்காது - பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்
x
தினத்தந்தி 9 March 2022 6:53 PM IST (Updated: 9 March 2022 6:53 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இருக்காது என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

தமிழக அரசின் பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இருக்காது. விலை உயர்வு, வரி உயர்வு மட்டுமே பட்ஜெட்டில் இருக்கும். புதிதாக எந்த விஷயத்தையும் செய்யாமல், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஆட்சி நடத்தி வருகின்றனர். மதுபான கடைகளின் வருமானத்தை வைத்து திமுக அரசு ஆட்சி நடத்தி வருகிறது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலில் பாஜக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

உக்ரைனில் இருந்து தமிழகம் வரும் மாணவர்களின் கோரிக்கைகள் எந்தவிதமான கோரிக்கைகளாக இருந்தாலும் மத்திய அரசு அதை பரீசிலிக்கும். பிரதமர் மோடியின் முழு முயற்சியே நூறு சதவீதம் இந்திய மாணவர்களை முழுமையாக மீட்க வேண்டும் என்பது தான். மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட பிறகு மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story