நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது


நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது
x

நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது.

சென்னை,

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி சென்னை தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா வசிக்கும் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சூர்யா நடித்து தற்போது வெளிவந்துள்ள எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்திற்கும், பா.ம.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த படத்தை திரையிடக்கூடாது என்று சில மாவட்டங்களில் தியேட்டர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Next Story