மனைவியை தவறாக பேசிய நண்பனை அடித்து கொலை செய்த கணவன்...!
மனைவியை தவறாக பேசிய நண்பனை கொலை செய்த கணவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் கோழி பாபுவின். இவரது வீட்டிற்கு வெளியில் முனீஸ்வரன் என்ற அனுமான் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காரியாபட்டி போலீசார் முனீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேச பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் காரியாபட்டியை சேர்ந்த கோழி பாபு (42) பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் மூலம் பல அதிர்ச்சியான உண்மைகள் வெளிவந்து உள்ளது.
இது தொடர்பா போலீசார் கூறுகையில்,
முனீஸ்வரன் மற்றும் கோழி பாபு நண்பர்கள். இவர்கள் இருவரும் விறகுகளை வெட்டி கடையில் விற்பனை செய்து வரும் பணத்தை கொண்டு மது அருந்தி உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் மது அருந்தி கொண்டிருந்த போது கோழி பாபுவின் அக்கா மகன் அருண்பாண்டி(26) வந்து உள்ளார். அப்போது முனீஸ்வரன் கோழி பாபுவின் மனைவியை தவறாக பேசி உள்ளார். இதனை கோழி பாபுவும், அருண்பாண்டி கண்டித்து உள்ளனர்.
இதனை முனீஸ்வரன் கேட்காமல் தொடர்ந்து பேசி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கோழி பாபுவும், அருண்பாண்டி அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து முனீஸ்வரன் தலையில் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
பின்னர் முனீஸ்வரன் உடலை கோழி பாபுவின் வீட்டுக்கு வெளியே படுக்க வைத்து விட்டு இருவரும் தப்பியோடி உள்ளனர் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story