நெதர்லாந்தில் இருந்து பார்சலில் வந்த போதை பொருட்கள் - பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணை
நெதர்லாந்தில் இருந்து விமானம் மூலம் பார்சலில் வந்த போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து விஜயவாடா மற்றும் ஹைதராபாதைச் சேர்ந்த நபர்களின் முகவரியிட்ட இரண்டு பார்சல்களை சந்தேகத்தின் பேரில் திறந்தபோது, அவற்றில் போதை மருந்துகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 32 போதை மாத்திரைகள், 419 கிராம் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, இதன் பின்னனியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story