காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு
கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த நிலையில் நண்பர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கீரனூர்,
கோவை மாவட்டம் கணபதி பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவர் மகன் ஜெயக்குமார் (வயது 17). இவர் அங்கு உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இவருடன் படித்து வரும் நண்பர் திண்டுக்கல் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த சுதிர் (17).
இந்நிலையில் சுதிர் வீட்டு நடைபெற்ற நிகழ்ச்சில் கலந்து கொள்வதற்காக ஜெயக்குமார் நேற்று பெரிச்சிபாளையம் வந்துள்ளார். அங்கு தனது நண்பர் வீட்டுல் இருந்து ஜெயக்குமார், சுதிர் மற்றும் அவரது உறவினர்களான 3 பெண்கள் என 5 பேரை சுதிர் காரில் ஏற்றி கொண்டு பெரிச்சிபாளையத்தில் இருந்து நால்ரோடு பகுதியை நோக்கி சென்று உள்ளனர்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் பெரிச்சிபாளையம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற கார் கீரனூர் அடுத்த கல்துறை பகுதியில் வந்து உள்ளது.
அப்போது ஈரோட்டில் இருந்து பழனி நோக்கி வந்த தனியார் பேருந்து இவர்கள் வந்த காரி மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுதிர் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இது குறித்து அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது கீரனூர் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story