“சட்டம் இயற்றும் இடத்தில் பெண்கள் இருக்க வேண்டும்” - தொல்.திருமாவளவன் எம்.பி.
சட்டம் இயற்றும் இடத்தில் பெண்கள் இருக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கோடம்பாக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மகளிர் தின விழா, உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்த விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், சட்டம் இயற்றும் இடத்தில் பெண்கள் இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் பெண்கள் மீதான அடக்குமுறை குறையும் என்றும் தெரிவித்தார். அரசு துறை அதிகாரத்தில் இருந்தாலும், அரசியலில் அதிகாரத்தில் பெண்கள் வலிமை பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story