தமிழர்கள் எங்கு இருந்தாலும், அவர்களை காப்பாற்றுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழர்கள் எங்கு இருந்தாலும், அவர்களை காப்பாற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக அங்கு மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அவர்களை மீட்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன் விளைவாக தமிழக மாணவர்கள் விரைவாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரு குழு அமைத்து மாணவர்களை மீட்டு அழைத்து வந்தோம். உக்ரைனில் இருந்து 2,000 தமிழர்களை மீட்டு வந்துள்ளோம். தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம் திமுக தான்.
தமிழர் என்றால் ஒரு உணர்வு வரும்; அது உள்ளூர் தமிழர் என்றாலும் சரி உக்ரைனில் இருந்தாலும் சரி.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Related Tags :
Next Story