சென்னையில் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகள் காட்சியகம் - நீதியரசர் ஜோதிமணி தொடங்கி வைத்தார்
தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகள் காட்சியகம் 24 மணி நேரமும் இலவசமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கோயம்பேட்டில் தமிழர்களின் பாரம்பரியமான இசைக் கருவிகளின் காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. கோசை நகரான் தமிழர் தொல்லிசை கருவியகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த காட்சியகத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதியரசர் ஜோதிமணி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து சிவபெருமான் கோவில்களிலும் இது போன்ற காட்சியகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் 80 வகையான இசைக்கருவிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் இலவச கண்காட்சியாக செயல்படும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சிவகுமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story