கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தாய் மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு...!
கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தாய் மகன் உட்பட 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கடத்தூர்,
திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சிவ தேவி (வயது 40). இவர்களுக்கு விஜய் கோவிந்தன் (16) என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் சிவ தேவியின் தனது தந்தை பரமசிவம் மற்றும் உறவினர்களுடன் ஈரோடு மாவட்டம் கொடிவேரிக்கு காரில் சென்று உள்ளனர்.
இவர்கள் கீழ்பவானி அருகே வந்த போது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழ்பவானி வாய்க்காலில் குளித்துள்ளனர். அப்போது சிவ தேவியின் மகன் விஜய கோவிந்தன் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் சிவ தேவியும், உறவினர் சாமிலி என்பவரும் அவரை காப்பாற்ற முயன்று உள்ளனர்.
இந்த சம்பவத்தில் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளனர். இது குறித்து அறிந்த
கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய 3 பேரையும் தீவிரமாக தேடினர்.
பின்னர் 3 பேரின் உடல்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story