பொன்னேரியில் தமிழில் திருக்குட நன்னீராட்டு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு


பொன்னேரியில் தமிழில் திருக்குட நன்னீராட்டு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 March 2022 8:41 PM IST (Updated: 13 March 2022 8:41 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே ஆத்மலிங்கேஸ்வரர் திருகோவிலில் தமிழில் திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பெரவள்ளூர் கிராமத்தில் ஆத்மலிங்கேஸ்வரர் திருகோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சமஸ்கிருதம் இன்றி தமிழில் திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

பக்தர்கள் நன்கொடை உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட இந்த கோவிலில் சிவனடியார்களும், ஓதுவார்களும் தாய்தமிழில் திருவாசகம், திருப்புகழ் பாசுரங்கள் பாட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story