வார்டு சபை கூட்டங்கள்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு


வார்டு சபை கூட்டங்கள்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
x
தினத்தந்தி 14 March 2022 12:25 AM IST (Updated: 14 March 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

வார்டு சபை கூட்டங்கள்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ‘டுவிட்டரில்’ கூறியிருப்பதாவது:-

மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் பகுதி சபை, வார்டு சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. உள்ளாட்சி தேர்தல் அறிக்கையிலும், முகநூல் பதிவிலும் பா.ம.க. வலியுறுத்தியிருந்தது நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சி.

பெங்களூருவில் வார்டுக்கான திட்டங்களை வார்டு குழுக்களே தீர்மானிக்கின்றன. அதைப்போலவே, தமிழ்நாட்டின் வார்டு சபைகளும் அவற்றின் பகுதிக்கு தேவையான மக்கள்நல பணிகளை தாமே தேர்ந்தெடுத்து செயல்படுத்துவதற்கான நிதி அதிகாரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story