புதுச்சேரியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 March 2022 10:00 AM IST (Updated: 14 March 2022 10:00 AM IST)
t-max-icont-min-icon

போனஸ் வழங்காததை கண்டித்து புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

புதுச்சேரி, 

கடந்த 2 ஆண்டுகளாக போனஸ் வழங்காததை கண்டித்து புதுச்சேரியில் அரசு சாலைப் போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக புதுச்சேரி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஊழியர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த திடீர் வேலைநிறுத்தம் காரணமாக நகர மற்றும் தொலைதூர பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் புதுச்சேரியில் தமிழ்நாடு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதால், பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

Next Story