மிலிட்டரி கேன்டீனை முற்றுகையிட்ட முன்னாள் ராணுவ வீரர்கள்...!
விருதுநகர் மிலிட்டரி கேன்டீனை முன்னாள் ராணுவ வீரர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகரில் மிலிட்டரி கேன்டீன் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கேன்டீனுக்கு பொருட்கள் சரிவர வினியோகம் செய்யவில்லை என்று தெரிகின்றது.
இதற்கு முன் ராணுவ வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்து உள்ளனர். இந்த நிலையில் இன்று மிலிட்டரி கேன்டீன் முன்பு முன்னாள் ராணுவ வீரர்கள் கூடினர்.
அப்போது மிலிட்டரி கேன்டீனுக்கு முறையாக பொருட்கள் வினியோகம் செய்ய வலியுறுத்தி கேன்டீனை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்டுள்ள முன்னாள் ராணுவ வீரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story