தனியார் இருசக்கர வாகன டாக்சி சேவையை நிறுத்த வேண்டும்; ஆட்டோ டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு...!


தனியார் இருசக்கர வாகன டாக்சி சேவையை நிறுத்த வேண்டும்; ஆட்டோ டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு...!
x
தினத்தந்தி 14 March 2022 5:30 PM IST (Updated: 14 March 2022 5:21 PM IST)
t-max-icont-min-icon

தனியார் இருசக்கர வாகன டாக்சி சேவையை நிறுத்த வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்துள்ளனர்

கோவை, 

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். அப்போது கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் தனியார் இருசக்கர வாகன டாக்சி (ரபிடோ செயலி) சேவையை நிறுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளனர். 

அந்த மனுவில் ஆட்டோ டிரைவர்கள் கூறியிருப்பதாவது:-

கோவையில் 15 ஆயிரம் ஆட்டோக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் கோவையில் தனியார் இரு சக்கர வாகன டாக்சி (ரபிடோ செயலி) தற்போது பலராலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகை டாக்சிகளால் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. இதில் செல்லும்போது விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் ஏற்பட்டால் காப்பீடு தொகை பெற முடியாது.

கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் இந்த டாக்சி சேவை அதிக அளவில் உள்ளது. எனவே முறையாக அனுமதி இல்லாமல் செயல்படும் டாக்சி சேவையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story