70 ஆயிரம் கோடியில் 20,000 மெகாவாட் சூரிய மின் நிலையங்கள் - தமிழக அரசு திட்டம்
70 ஆயிரம் கோடியில் 20,000 மெகாவாட் சூரிய மின் நிலையங்களை நிறுவ அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை,
70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 20,000 மெகாவாட் சூரிய மின் நிலையங்களை நிறுவ அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவை குறைத்து புதுபிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அதிகரிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக சூரிய மின்நிலையம் நிறுவும் இடங்களை அடையாளம் காண மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் 20-ந் தேதிக்குள் டெண்டரை முடித்து எப்ரல் முதல் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களை கட்டி முடிக்கவும், 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 20,000 மெகாவாட் உற்பத்தியை 2030-க்குள் முடிக்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காலக்கெடு விதித்துள்ளது.
Related Tags :
Next Story