பதவியை நான் ஒருபோதும் விரும்புவதில்லை - டிடிவி தினகரன்


பதவியை நான் ஒருபோதும் விரும்புவதில்லை - டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 15 March 2022 3:40 PM IST (Updated: 15 March 2022 3:40 PM IST)
t-max-icont-min-icon

பதவியை நான் ஒருபோதும் விரும்புவதில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக 5-ஆம் ஆண்டு தொடக்க விழா ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கொடியேற்றி வைத்தார்.

அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

பதவியை நான் ஒருபோதும் விரும்புவதில்லை; அமமுகவில் தொண்டர்கள் முடிவே இறுதியாக இருக்கும், நான் எந்த ஒரு முடிவும் தனிப்பட்ட முறையில் எடுக்க மாட்டேன்.

கவர்னருடன் முதல்-அமைச்சர் சந்திப்பு என்பது மக்கள் நலன் கருதியா அல்லது திமுக நலன் கருதியா என்பதை பார்க்க வேண்டும். திமுக எதாவது பிரச்னையில் சிக்கியிருக்கலாம், அதற்கு சமரசம் பேசவும் கவர்னரை சந்திக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story