ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தலில் ரகளை: தி.மு.க. கவுன்சிலரை ஏன் கைது செய்யவில்லை?
ஆடுதுறை பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்குச் சீட்டை பறித்து ரகளையில் ஈடுபட்ட தி.மு.க. கவுன்சிலரை ஏன் கைது செய்யவில்லை என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 4-ந் தேதி நடந்தது. அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
அதையடுத்து இந்த தேர்தலை போலீஸ் பாதுகாப்புடன் விரைவாக நடத்த உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஸ்டாலின் உள்பட 8 கவுன்சிலர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதில், தி.மு.க. கவுன்சிலர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளதால், தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்று ரகளையில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர்.
வீடியோ பதிவு
இந்த வழக்குக்கு தேர்தல் அதிகாரி பதிலளிக்காததால், அவர் மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஐகோர்ட்டு விசாரணைக்கு எடுத்தது. அதுமட்டுமல்லாமல், தலைவர் பதவிக்கான தேர்தலின்போது தி.மு.க.வினர் ரகளையில் ஈடுபட்டபோது எடுத்த வீடியோ பதிவையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அந்த வீடியோ பதிவை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது.
வேடிக்கை
வீடியோ பதிவை பார்த்த நீதிபதிகள், ‘தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் வாக்குச் சீட்டை ஒரு கவுன்சிலர் பறித்துச் செல்கிறார். அதை தடுக்காமல் போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். போலீசாரின் இந்த செயலை ஏற்கமுடியாது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அமைதியான முறையில் நடத்தியது. அது பாராட்டுக்குரிய செயல்.
அதேநேரம், இதுபோன்ற நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இந்த தேர்தலில் வாக்குச் சீட்டை பறித்துச் சென்ற கவுன்சிலரை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேள்வி எழுப்பினர்.
விளக்கம்
அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்’ என்றார். இதையடுத்து, ‘ஆடுதுறை பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் நடந்த சம்பவத்தில் என்ன முடிவு எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story