சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து; 19 பேர் படுகாயம்
விருத்தாசலம் அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதிய விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடலூர்,
சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக சிதம்பரம் நோக்கி நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 25 பயணிகள் இருந்தனர். பேருந்தை திருநாவுக்கரசு என்பவர் ஓட்டிச் சென்றார். கண்டக்டராக செந்தில்குமார் என்பவர் பணியில் இருந்தார்.
அதிகாலை 3 மணி அளவில் விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறிகெட்டு ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,
விருத்தாசலம் அருகே அரசு பேருந்து விபத்துக்கு உள்ளானதில் பயணிகள் 19 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவகின்றனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story