சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடஒதுக்கீடு செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன் - எடப்பாடி பழனிசாமி


சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடஒதுக்கீடு செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 16 March 2022 2:50 PM IST (Updated: 16 March 2022 2:50 PM IST)
t-max-icont-min-icon

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடஒதுக்கீடு செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டிற்கான அரசாணை செல்லும் என்றும் மருத்துவ மேற்படிக்கிற்கான கலந்தாய்வை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு இன்று அனுமதி அளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% 
இட ஒதுக்கீடு செய்து எனது தலைமையிலான அம்மா அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அதற்கான கலந்தாய்வு நடத்த அனுமதியும் அளித்துள்ள உச்சநீதிமன்ற  தீர்ப்பினை உளமாற வரவேற்கிறேன்.

தமிழர் நலனுக்காகவும் தமிழகம் தன்னிறைவு பெறுவதற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து பாடுபடும் என உறுதி கூறுகிறேன். என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Next Story