தற்காப்புக்காவவே ரவுடி நீராவி முருகன் சுடப்பட்டார் - தென்மண்டல ஐஜி அன்பு தகவல்
தற்காப்புக்காகவே ரவுடி நீராவி முருகன் சுடப்பட்டார் என தென்மண்டல ஐஜி அன்பு தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பிரபல ரவுடி நீராவி முருகன் இன்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி நீராவி முருகனை, திண்டுக்கல் தனிப்படை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது கொலை பல்வேறு வழக்குகள் உள்ளன. தூத்துக்குடியில் உள்ள புதியம்பத்தூர் பகுதியில் உள்ள நீராவிமேடு என்ற தெருவில் வசித்து வந்ததால், ரவுடி முருகன் நீராவி முருகன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
ரவுடி நீராவி முருகன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரவுடி நீராவி முருகன் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து தென்மண்டல ஐஜி அன்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
நெல்லையில் ரவுடி நீராவி முருகன் என்கவுண்டர் தொடர்பாக களக்காடு போலீஸ் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரவுடி நீராவி முருகன் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கைது செய்ய முயன்றபோது நீராவி முருகன் போலீசாரை தாக்கினார். இதனால், தற்காப்புக்காகவே நீராவி முருகன் சுடப்பட்டார்’ என்றார்.
நீராவி முருகனை கைது செய்யமுயன்றபோது அவர் அரிவாளால் வெட்டியதில் 4 போலீசாருக்கு காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story