தமிழகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 March 2022 9:15 PM IST (Updated: 16 March 2022 9:15 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது.  கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு வேகமாக சரிந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது.

 தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் இன்று  மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 145- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 161- பேர் குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு பதிவாகவில்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 100- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தலைநகர் சென்னையில் 23 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 873- பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.  

Next Story