ஆள்மாறாட்டம் மூலம் வங்கிகளில் கடன் வாங்கி லட்சக்கணக்கில் மோசடி
ஆள்மாறாட்டம் செய்து வங்கிகளில் கடன் வாங்கி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரது கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை,
கைது செய்யப்பட்ட முன்னாள் வங்கி பெண் அதிகாரியின் பெயர் ராதிகா (வயது 37). எம்.எஸ்.சி பட்டதாரியான இவரது கணவர் பெயர் கார்த்திக். இவரும் முன்னாள் வங்கி அதிகாரிதான். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஈரோட்டை சேர்ந்த இவர்கள் வங்கி வேலையை உதறி தள்ளி விட்டு, வங்கிகளில் ஆள்மாறாட்டம் மூலம் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். வங்கிகளில் கடன் வாங்கி தருவதாகவும் இவர்கள் பலரை ஏமாற்றி பணம் பறித்து உள்ளனர்.
இந்த தம்பதி மீது கோவை, சென்னை, ஈரோடு, மதுரை போன்ற பல இடங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளது. மோசடி ராஜா-ராணி போல இவர்கள் வலம் வந்தனர்.
சென்னை எச்.டி.எப்.சி. வங்கியில் நாகபிரீத்தி என்பவர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து, போலியான ஆவணங்களை கொடுத்து, ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் செல்போன் கடன் வாங்கி மோசடி செய்ததாக ராதிகா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
ராதிகா கைதானார்
இந்த புகார்மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ராதிகா நேற்று கைது செய்யப்பட்டார். அவரது கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story