அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு
தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை ஏற்று சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்தது.
சென்னை,
கடந்தாண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தோ்தலின்போது, போடிநாயக்கனூா் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதனை எதிா்த்து, அந்தத் தொகுதி வாக்காளா் மிலானி என்பவா் சென்னை ஐகோர்ட்டில் தோ்தல் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்துக்கள், கடன் விவரங்களை மறைத்ததாகவும், வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டிருந்தாா். இந்த வழக்கை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்து வந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் இவ்வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Related Tags :
Next Story