5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு


5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 17 March 2022 2:30 PM IST (Updated: 17 March 2022 2:30 PM IST)
t-max-icont-min-icon

5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .

சென்னை ,

5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்தி ,அதற்க்கான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது . 5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ .1,500லிருந்து ,ரூ 2,000ஆக உயர்ந்துள்ளது. 

மனவளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக
பாதிக்கப்பட்டவர்கள், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்,முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள்,பார்கின்சன் நோய்,தண்டுவட மரப்பு நோய் ஆகிய பாதிப்புடையவர்கள் ,உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .

 2,15,505 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை உயர்த்த ரூ 31.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுளள்து 

Next Story