கோவையில் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது...!


கோவையில் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது...!
x
தினத்தந்தி 18 March 2022 10:00 AM IST (Updated: 18 March 2022 9:53 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே பட்டா மாறுதலுக்கு ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

உடுமலை.

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா செஞ்சேரிபுத்தூரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 37). இவர் உடுமலை தாலுகா தொட்டம்பட்டி வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தொட்டம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட ஜல்லிப்பட்டியில் தோட்டம் ஒன்றை பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் (வயது 47) என்பவர் விலைக்கு வாங்கியுள்ளார். 

இதையடுத்து பட்டா பெயர்மாறுதல் செய்து தொடர்பாக ஜெயராமன், தொட்டம்பட்டி வி.ஏ.ஓ வேலுசாமியை அணுகியுள்ளார். அப்போது பட்டா மாறுதலுக்கு வேலுசாமி ரூ. 6 ஆயிரத்து 500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுத்து பட்டா பெயர்மாற்றம் செய்ய ஜெயராமன் விரும்பவில்லை. இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் ஜெயராமன் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெயராமனிடம் கொடுத்து அதை வி.ஏ.ஓ  வேலுசாமியிடம் கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து அந்த பணத்தை பெற்றுக் கொண்ட ஜெயராமன் நேராக தொட்டம்பட்டி சென்று வி.ஏ.ஓ வேலுச்சாமியிடம் ரூ. 6 ஆயிரத்து 500 லஞ்சமாக கொடுத்துள்ளார்

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார் வேலுசாமியை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Next Story