தமிழக பட்ஜெட்: பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு...!


தமிழக பட்ஜெட்: பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு...!
x
தினத்தந்தி 18 March 2022 11:19 AM IST (Updated: 18 March 2022 11:19 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  உரை நிகழ்த்தினார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு;

* இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு.பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

* புதிதாக 15 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்க ரூ. 125 கோடி நிதி ஒதுக்கீடு. அறிவு சார் நகரம் உருவாக்கப்படும், ஆராய்ச்சிப் பூங்கா நிறுவ ஊக்குவிக்கப்படும்

* அரசுப்பள்ளிகள் தவிர பிற பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு

* நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களின் தனித்திறன் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படும்; அதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

Next Story